பேதனம்

பேதனம் எட்டுக்கும் மந்திரம்

-அகத்தியர் அஷ்டகர்மங்களில் ஏழாவதாக சொல்லப்படுவது பேதனமாகும். பேதனத்தின் அதிதேவதை குபேரன் ஆவார். பேதனம் என்பது ஒருவரை தான் என்னசெய்கிறோம் என்ற சிந்தனையே இல்லாமல் அவரின் புத்தியை பேதலிக்கச்செய்வதாகும் . இதுவும்நோக்குவர்மத்தைப்போல் ஒருவகை தாக்குதல்தான். ஒருவரை பார்த்து இவண் பேதலிக்க வேண்டுமென எண்ணினால் அவன் பேதலித்துப்போய் விடுவான். இப்பேதனம் எட்டு வகைப்படும். அவை 1)சர்வ பேதனம் 2)இராஜ பேதனம் 3)புருஷ பேதனம் 4)ஸ்திரி பேதனம் 5)மிருக பேதனம் 6)தேவ பேதனம் 7)அக்கினி பேதனம் 8)லோக பேதனம் என்பனவாகும். பேதனத்தின் அதிதேவதை குபேரன் பேதனம் எட்டுக்கும் மந்திரம்-அகத்தியர் பாரப்பா வித்துவே ஷணத்தைச் சொன்னேன் பத்தியுடன் பேதனத்தைப் பகரக்கேளு மாரப்பா பேதனந்தானதீத வித்தை மக்களே ஓம்றீயுஞ்சவ்வும் ஸ்ரீயும் கிலியு அங்அங் நசி நசி சுவாகாவென்று நிசமான யெண்கோணம் நன்றாய்க்கீறி காரப்பா கோணம்நடு விந்துபோட்டு கமலநடு டங்கெனவே கனிவாய்ப்போடே. போட்டெடுத்துச் சக்கரத்தை முன்னேவைத்து புத்தியுடன் மானதமாய்ப் பூசைபண்ணி நாட்டமுடன் மந்திரத்தைத் தினம்நூறப்பா நன்மையுடனுருச் செபித்து நயனங்கண்டு வாட்டமில்லா வாசியிலே நின்றாயானால் மகத்தான பேதனந்தான் மார்க்கமாக காட்டும்முன்னே பேதலிக்குமந்திரசித்து கைகண்டவித்தையடா கனிந்துபாரே. -அகத்தியர் பரிபூரணம்1200