மாரணம்

எட்டுக்கும் மந்திரம்-அகத்தியர்

அஷ்ட கர்மங்களில் எட்டாவதாக சொல்லப்படுவது மாரணமாகும். இது தனக்கும் தன்னைச்சார்ந்தவர்க்கும் வேண்டாத அல்லது கேடு விளைவிப்பவைகளை மாரணிக்க(அழிக்க)செய்வதாகும். மாரணத்தின் அதிதேவதை எமன் ஆவார். மாரணம் எட்டுவகைப்படும். அவை 1)சர்வ மாரணம் 2)அரச மாரணம் 3)சத்துரு மாரணம் 4)சர்வபூத மாரணம் 5)சர்வஜீவஜெந்து மாரணம் 6)சர்வவிஷ மாரணம் 7)சர்வதேவ மாரணம் 8)சர்வரிஷி மாரணம் என்பதாகும். மாரணம் எட்டுக்கும் மந்திரம் ஆமப்பா பேதனத்தை நன்றாய்ச் சொன்னேன் அரகரா மாரணத்தினருமை கேளு தாமப்பா சொல்கிறே மந்திரசித்து தனதாக ஓம் ஆம்றீங்றீங் சிம்றீங் கிலிறீங் பிறீங் பிறீங் பிறீங் சுவாகாவென்று ஓமப்பா ஒருமனதாய்ச் செபிக்கக்கேளு உறுதியுடன் சூலமிட்டு அடியிலேதான் நாமப்பா சொல்லுகிறோங் கம்மென்றேதான் நாட்டமுடன் தானெழுதி நயனம்பாரே. பாரப்பா நயனமென்ற சூலந்தன்னை பத்தியுடன் மானதமாய் பூசைபண்ணி காரப்பா மந்திரத்தைத் தினம் நூறாக கண்ணார உருச்செபித்து கருணையானால் நேரப்பா மாரணந்தா னிமிஷத்துள்ளே நினைத்தபடி நின்றுவிளையாடும் பாரே தேரப்பா மனந்தேறி யறிவில்நின்று சிவசிவா மாரணத்தைத் தீர்க்கம் பண்ணே. தீர்க்கமுடன் மாரணந்தான் சித்தியானால் தெளிந்துகொண்டு தன்னுயிர்போல் செகத்தைப்பார்த்து மார்க்கமுடன் சிவயோக வாழ்வில்நின்று மைந்தனே பூரணத்தை தினமும்நோக்கி ஏர்க்கையுடன் தானிருக்க வேண்டுமானால் இடும்பாக மாரணத்தைச் செய்ய வேண்டாம் ஆர்க்கும்வெகு கொடுமைகளைச் செய்தபேரை அப்போதே மாரணிக்க அந்தந்தானே. -அகத்தியர் பரிபூரணம்1200