வித்துவேஷணம் என்பது ஒருவருக்கொருவர் பகையை உண்டாக்கி பிரிப்பது இதனால் எப்படிப்பட்டவரையும் பிரித்து விடலாம். எது தனக்கு வேண்டாததோ அது தானாகத்தன்மேல் வெறுப்புற்று தன்னைவிட்டு ஓடிவிடும்படி செய்வதே வித்துவேஷணமாகும். அதைப்பற்றி இன்றைய பதிவில் காண்போம். வித்துவேஷணம் எட்டு உட்பிரிவுகளைக்கொண்டதாகும், அவை
1)சர்வ வித்துவேஷணம்
2)இராஜ வித்துவேஷணம்
3)புருச வித்துவேஷணம்
4)ஸ்திரி வித்துவேஷணம்
5)மிருக வித்துவேஷணம்
6)தேவ வித்துவேஷணம்
7) லோக வித்துவேஷணம்
என்பனவாகும். வித்துவேஷணத்தின் அதிதேவதை வாயு தேவன் ஆவார். வித்துவேஷணம் எட்டுக்கும் மந்திரம்-அகத்தியர் பாசமுடன் வித்துவேஷணத்தைக்கேளு பதிவான மந்திரமிது சுத்தவித்தை வாசமுள்ள வித்தையடா நேசமான மந்திரமிது ஓம் ஸ்ரீயும் ரீயும் கிலியும் சர்வயிந்திராணிபகவதே சுவாகாவென்னே எண்ணமுடன் மந்திரத்தை செபிக்குமார்க்கம் இன்பமுடன் விபூதியிலே முக்கோணமிட்டு கண்ணிறைந்த முக்கோண நடுவே விந்து கருணைவளர் விந்துநடு ஓங்காரஞ்சாத்தி முன்னிறைந்த ஓங்கார நடுவிலேதான் முத்தியுடன் சுத்தமதாய் சிங்கென்றிட்டு சன்னதியை நோக்கிமனத் தன்மையாலே சங்கையுடன் மானதமாய்ப் பூசைசெய்யே. செய்யடா மானதமாய்ப் பூசைபண்ண சிந்தைமன தொன்றாக சிவனைநோக்கி மெய்யடா மந்திரமிது தினம்நூறப்பா விரும்பிமன மொன்றாக உருவேசெய்தால் அய்யனே வித்துவேஷணந்தானெட்டும் அரகரா தன்வசமா யடங்கியாடும் மய்யமென்ற சுழிமுனையிலே அடங்கியாட வரிசையிடனினைத்தபடி வாய்க்குந்தானே. -அகத்தியர் பரிபூரணம்1200