21 Mar வீடு கட்டும்போது கடைப்பிடிக்கவேண்டிய வாஸ்து முறைகள்!
தெற்கை விட வடக்கிலும், மேற்கை விட கிழக்கிலும் அதிக காலியிடம் விட்டு வீடு கட்டினால் செல்வம்பெருகும், வியாபாரம் விருத்தி அடையும், குழந்தைகளால் புகழ் மேலோங்கும்.
வடக்கு, கிழக்கு, வடகிழக்கு போன்ற திசை மாடியில் நீர்த்தொட்டி அமைப்பது உடல் ஆரோக்கியம் பெருகசெய்யும்.
வடக்கு, வடமேற்கு பகுதியிலோ அல்லது வீட்டில் அடுத்து வட கிழக்கிலோ தொழுவம் அமைப்பது நல்லது.வடக்கு,
கிழக்கு பகுதியில் விலைக்கு வரும் பூமியை வாங்கலாம். தெற்கு, மேற்கு பகுதியை தவிர்க்கவும்.
தலைவாசலுக்கு குத்தல் வருவது போல் குளியலறை, கழிப்பறை அமைக்கக்கூடாது.
எப்படிப்பட்ட வீடாக இருந்தாலும் நடைப்பாதையில் கழிவறை அமைக்கக்கூடாது.
வீட்டுத் தாழ்வாரம் வீட்டை விட உயரமாக இருக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
வீட்டில் ஒற்றை தாழ்வாரம் அமைத்து, சுற்றிலும் சுவர் வைத்து, வாயில் விடுவது நல்லதல்ல, இதனால்வம்சவளர்ச்சி குறைபாடு ஏற்படலாம்.
சமையல் அறைக்கு முன்னால் வடக்கு, அல்லது கிழக்கில் கழிப்பறை, குளியலறை அமைப்பதை தவிர்க்கவும்.இது பெண்களுக்கு உடல்நிலை பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
தெருவின் மட்டத்திற்கு தாழ்ந்த மனையில் வசிப்பது செல்வதை குறைத்து நோய் ஏற்படுத்தும்.
வாஸ்துப்படி அறைகளை எந்தெந்த திசையில் அமைப்பது நல்லது…?
எப்போதும் வீட்டின் நடுவே நின்று திசைக்காட்டியின் உதவியோடு திசைகளை அறிந்துக்கொள்ளுங்கள். வீட்டின்முதன்மை வாசல் கதவு வழியாகத்தான் நேர்மறை சக்தி வீட்டிற்குள் நுழையும்.
புது மனையின் வாசற்கதவு, தென்மேற்கு திசையை நோக்கி இருக்காதபடி பார்த்துக் கொள்ளுங்கள். ஏனென்றால்;இந்த திசைதான்; தீய சக்திகளின் நுழை வாயில். அது நமக்கு கஷ்டங்களையும் துரதிஷ்டத்தையும் தரும்.ஏற்கனவே வீட்டின் கதவு இந்த திசையில் இருந்தால், இரண்டு அனுமான் கடவுளின் படம் இருக்கும் டைல்கல்லை வாசலுக்கு வெளியில் பதித்து விடுங்கள்.
கோவில் அல்லது பீடம்தான் அனைத்து வாஸ்து சாஸ்திரங்களுக்கும் சக்கரவர்த்தி. அதனால் பூஜை அறையைவடகிழக்கு திசையில் அமைத்திடுங்கள்; அனைத்து நன்மைகளும் வந்து சேரும். மேலும் வணங்கும் போதுகிழக்கு திசையை நோக்கி வணங்கவேண்டும்.
சமையலறை என்பது வளமையை குறிக்கும் இடமாகும். அதனால் இந்த இடம் தென்கிழக்கு திசையில் இருக்கவேண்டும். வடகிழக்கு திசையில் சமையலறை அமைந்தால், வீட்டில் பணம் மற்றும் உடல்நல பிரச்சனைகள்ஏற்படும். ஒரு வேளை வடகிழக்கு திசை யில் இது இருந்தால், மூன்று வெண்கல பாத்திரத்தை தலைகீழாகஉட்கூரையில் தொங்க விடுங்கள்; ஆனால் அது அடுப்பை நோக்கி தொங்கக் கூடாது.
படுக்கை அறையை தென்மேற்கு திசையில் இருக்க வேண்டும். மேலும் தூங்கும் போது தலை, தெற்கு அல்லதுமேற்கு திசை நோக்கி இருக்க வேண்டும். ஆனால் கண்டிப்பாக வடகிழக்கு திசையில் தூங்கக் கூடாது.
குளியலறை மற்றும் கழிப்பறையில் நரகத்தின் சக்தி இருப்பதால், இந்த அறை மேற்கு அல்லது கிழக்குதிசையில் இருக்க வேண் டும். கண்டிப்பாக வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் இருக்கக் கூடாது. அப்படிஇருந்தால் வீட்டில் பணம், உடல்நிலை மற்றும் கல்வியில் பிரச்சனைகள் இருக்கும்.
வீட்டின் மையப் பகுதி வீட்டின் மூக்கைப் போன்றது. இங்கே தான் நம் வீடு மூச்சு விடுகிறது!!! அது திறந்தவெளியாகவும், குப்பையாகவும் இருக்கக்கூடாது. இங்கே சுவரிருந்தால் வயிற்று பிரச்சனை மற்றும்பணப்பிரச்சனை வரக்கூடும். அதனால் ஒரு ஜீரோ வாட்ஸ் நீல பல்பை 24 மணி நேரமும் எரிய விடுவது நல்லது.
வாஸ்துவில் பின்பற்றப்படும் சில முக்கிய பொதுவான விதிகள்…!
சூரியனை ஆதாரமாக கொண்டு ஜட பொருட்களான செங்கல், சிமெண்ட், மணல், கம்பிகள், வெட்டப்பட்ட மரம்போன்ற வஸ்துகளை சரியான விகிதத்தில் கலந்து நிலத்தின் மேல் கட்டடமாக எழுப்பி உயிரோட்டம்கொடுப்பதே வாஸ்து.
வாஸ்து சாஸ்திரம் என்பது ஒவ்வெரு மனித வாழ்வின் வெற்றிக்கும் அடித்தளமாக விளங்கக்கூடிய ஒன்றாகும்.விதிகளின்படி ஒரு வீடோ அல்லது தொழிற்சாலையோ அமைக்கப்படும் போது, அங்கு இருக்கக்கூடியஅனைவருக்கும் எப்பொழுதும் நல்ல ஆற்றலே இருக்கும். என்றும் மன அமைதி, உடல் நலம், செல்வசெழிப்போடு காணப்படுவர்.
வாஸ்து என்றால் நான்கு திசை மற்றும் நான்கு மூலைகள் கொண்டே கருதப்படுகின்றன. அவை, வடக்கு,கிழக்கு, தெற்கு, மேற்கு. மேலும் நான்கு மூலைகள் அதாவது வடகிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு, தென்மேற்குஆகும். இவற்றை கொண்டு வாஸ்துவில் அடிப்படையாக கருதப்படும்.
ஆறு மிக முக்கியமான பொதுவான விதிகள்:
மனை மற்றும் அதனுள் கட்டப்படும் கட்டிடம் இரண்டும் சதுரம் அல்லது செவ்வகமாக இருக்க வேண்டும்.
வடக்கு மற்றும் கிழக்கில் அதிக காலி இடம் இருந்தல் அவசியம்.
தலைவாசல் என்றுமே உச்சத்தில் தான் அமைக்கப்பட வேண்டும்.
தெருத்தாக்கம் இருந்தால் கண்டிப்பாக உச்சமாக தான் இருக்க வேண்டும்.
உட்புறம் மற்றும் வெளிப்புறம் போடப்படும் படிக்கட்டுகள் அமைக்கப்படும் முறையை அறிவது அவசியம்.
வடகிழக்கு பள்ளமாகவும், கனமில்லாமலும், தென்மேற்கு உயரமாகவும், கனமாகவும் இருத்தம் அவசியம்.
அனைத்து வாஸ்து தோஷங்களை நீக்கும் பரிகாரங்கள்…!
வீட்டில் உண்டான தோஷங்கள் விலகவும் வாஸ்து பகவானை நினைத்து பூஜைகள் செய்ய ஏற்ற வாஸ்துநாளில் இவ்வாறு பூஜை செய்வதால் அனைத்து கஷ்டங்களும் தீரும்.
கல்யாணம் பண்ணிப் பார், வீட்டை கட்டிப் பார் என்பார்கள். கலயாணம் எனும் வைபவம் நடப்பதற்கு குருவருள்தேவை. அதேபோல் வீடு அமைவதற்கு வாஸ்து பகவானின் பேரருள் மிக அவசியம்.
இறையருளும் குருவருளும் இருந்தால்தான், வாஸ்து பகவானின் அருளும் கிட்டும் என்கிறார்கள் ஆச்சார்யப்பெருமக்கள். சொந்த வீடா அல்லது வாடகை வீடா என்பது முக்கியமில்லை. நாம் இருக்கும் வீட்டில், வாஸ்துபகவானின் ஆட்சியும் நம் எண்ணங்களுமே குடியிருக்கின்றன. ஆகவே நம் எண்ணங்களை நாம் சரிவரவைத்துக் கொள்ளவேண்டும். அதேபோல், வாஸ்து பகவானை ஆராதிக்கவேண்டும்.
மிகப்பெரிய வீடு கட்டி வசித்து வந்தாலும், அங்கு எப்போதும் சண்டை, சச்சரவு, நோய், சிகிச்சை என்றுவாழ்க்கை சிக்கலாகவும், குழப்பமாகவும், நிம்மதி இல்லாமலும் ஆரோக்கியம் இல்லாமலும் இருக்கும். இப்படிஇருந்தால், வாஸ்து தோஷமாக தான் இருக்க வேண்டும்.
No Comments