திருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள்ள‍ வேண்டிய ஜோதிட விதிகள்

திருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள்ள‍ வேண்டிய ஜோதிட விதிகள்

1. முதல் விதி
திருமணம் செய்யும் மணமக்களின் நட்சத்திர பொருத்தம் மட்டுமல்ல..இருவருக்கும் ஜாதக பொருத்தமும் பார்க்க வேண்டும்..ரெண்டு பேருக்கும் ஒன்பது பொருத்தம் இருந்தாலும் ஜாதக பொருத்தம்,லக்னபொருத்தம்,ராசி பொருத்தம் இல்லாவிட்டால்,8 மாதம் கூட குடும்ப வாழ்க்கை நீடிக்காது..ஒன்பது பொருத்தம் இருந்தாலும் ஒத்து வராது….ஒன்போது பொருத்தம் இருக்குன்னு அந்த ஜோசியன் சொன்னானே என புலம்பி பிரயோஜனம் இல்லை.நட்சத்திர பொருத்தம் வேறு..ஜாதகத்தில் கிரகங்களின் வலிமை வேறு.
இருவரது ராசியும் ஒருவருக்கொருவர் 6,8,12ல் மறைய கூடாது..இருவரது லக்னமும் ஒருவருக்கொருவர் 6,8,12ல் மறைய கூடாது..இருவரது குருவும்,சுக்கிரனும் மறைய கூடாது கெடக்கூடாது….அப்போதுதான் இருவருக்கும் ஒற்றுமையும்,அன்பும்,பாசமும் பலமாகும்..இருவருக்கும் குடும்ப ஸ்தானம் எனும் லக்னத்துக்கு இரண்டாம் இடம் கெடாமல் இருந்தால் குடும்பம் எப்போதும் கெடாது.இருவருக்கும் ஒரே திசை நடக்க கூடாது.இருவருக்கும் ஏழரை சனி நடக்க கூடாது…இருவருக்கும் குருபலம் இருந்தால் நல்லது.அல்லது மணப்பெண்ணுக்காவது குருபலம் இருக்க வெண்டும்.
திருமணம் மல மாதத்தில் இடம்பெறக்கூடாது. மலமாதம் என்பது இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி ஒரே மாதத்தில் வருவது.
2. இரண்டாவது விதி
வைகாசி,  ஆவணி, ஐப்பசி,கார்த்திகை,தை, மாசி,மாதங்களில் திருமணம் செய்யலாம்..
3. மூன்றாவது விதி
இயன்றவரை வளர்பிறை  காலத்திலேயே திருமணம் செய்வது நல்லது
4. நான்காவது விதி
தமிழகத்தில் செவ்வாய்,சனி திருமணம் செய்வதில்லை..திருமணம் செய்ய வேண்டிய லக்னங்கள் –
ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு,கும்பம்,திருமனம் செய்ய வேண்டிய நட்சத்திரங்கள்-ரோகிணி,மிருகசிரீடம்,மகம்,உத்திரம்,அஸ்தம்,சுவாதி,அனுஷம்,மூலம்,உத்திராடம்,
திருவோணம்,சதயம்,உத்திரட்டாதி,ரேவதி,அசுவினி,புனர்பூசம்,பூசம்,
சித்திரை,அவிட்டம்,சதயம்
5. ஐந்தாவது விதி
துவிதியை, திரிதியை, பஞ்சமி, ஸப்தமி, தசமி, திரயோதசி ஆகிய சுப திதிகள்நல்லது.
6. ஆறாவது விதி
முகூர்த்த லக்கினத்துக்கு 7ம் இடம். முகூர்த்த நாளன்று சுத்தமாக இருக்க வேண்டும்.முகூர்த்த லக்னத்துக்கு 3,6,11 பாபர் நல்லது.8ல் குரு ஆகாது,6,8ல் சுக்கிரன்,புதன் கெடுதல்,2,3ல் சந்திரன் மிக நல்லது.7ஆம் இடத்தில் பாவர் இருந்தால் கெடுதல்
7. ஏழாவது விதி
அக்கினி நட்சத்திரம் காலகட்டத்தில் திருமணம் நடத்தக்கூடாது.வைகாசியில் எவ்வளவு காலம் அக்னி நட்சத்திரம் இருக்கிறது..அதில் முகூர்த்தம் வந்தால் தவிர்த்துவிடவும்.தனிய நாள்,கரிநாள் ,மரணயோகம்,இவைகள் ஆகாது
8. எட்டாவது விதி
திருமணத்தின் போது குரு, சுக்கிரன் போன்ற சுபகிரகங்கள் திருமண லக்கினத்துக்கும் மணமக்களின் ஜனன ராசிக்கும் எட்டாம் வீட்டில் இடம் பெற்றிருக்க கூடாது.
9. ஒன்பதாவது விதி
திருமணநாள் மணமக்களின் சந்திராஷ்டம தினமாக இல்லாமல் இருப்பது மிகமிக முக்கியமான விதி.தாரா பலன் பார்த்துதான் முகூர்த்த நாளை குறிக்க வேண்டும் எல்லா முகூர்த்தமும் எல்லோருக்கும் ஏற்றது அல்ல..
10. பத்தாம் விதி.
மணமக்களின் ஜனன நட்சத்திர நாளிலும்,.பிறந்த கிழமை,மணப்பெண் பிறந்த தமிழ் மாதம் ஆகாது..மணப்பெண்ணின் 10,19 ம் நட்சத்திரங்களிலும் ஆணின் 10 வது நட்சத்திரத்திலும் திருமணம் செய்யலாம்..
11. பதினொன்றாம் விதி
கடைசியாக மணமக்களின் பிறந்த தேதி அல்லது கிழமைகளிலும் கல்யாணம் பண்ணக்கூடாது.சாந்தி முகூர்த்தம் நேரம் மிக முக்கியம்..திருமணம் நடக்கும் நாள் முகூர்த்த நாளாக இருப்பதால் அன்றே வைப்பதும் நல்லதுதான்..வேறு நாளில் வைப்பதாக இருப்பின் ஒரு லக்னம் குறித்துதான் நேரம் வைப்பார்கள் அந்த லக்னத்துக்கு 1,7,8ஆம் இடம் சுத்தம்..ஜென்ம நட்சத்திரம் அன்று ஆகாது…எமகண்டம்,ராகுகாலம் ஆகாது,,இரவிலும் எமகண்டம் உண்டு..அதை கவனித்து நேரம் குறிக்க வேண்டும்…முதல்முறை நல்ல நேரத்தில் தாம்பத்யம் கொள்வதே நல்லது…
. அவரவர் குலதெய்வத்தை மனதில் வேண்டிக்கொண்டு உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆசியுடன் நல்லதொரு நாளை
குறியுங்கள்…காலண்டரில் பார்த்து வளர்பிறை முகூர்த்தம் அருமை என குறிக்க கூடாது..மணமக்களின் இருவர் ஜாதகத்தையும் தகுந்த ஜோதிடரிடம் கட்டி அவர் ஆலோசனையின் பேரில் நள் குறிப்பதே சிறப்பு.
No Comments

Post A Comment