ஆவிகள்

ஆவிகள்

1] பேய்கள் உறங்குவதில்லை.. தங்கள்

சாவுக்கான

நீதி கிடைக்கும்வரை அலைந்தபடி இருக்கும்.

.

2] பேய்கள் அல்லது ஆவிகள்

தங்களை வெளிக்காட்டிக்க

ொள்ளவே விரும்பும்..எனவே தான்

அறைகளில் நறுமணம் அல்ல்து வெளிர் நிற

புகைகளை பனிமூட்டங்களை பரப்புகின்றன.

.

3] பூனைகளால் தெளிவாக பேய்கள்

அல்லது ஆவிகளை காணமுடியும்.. உங்கள்

வீட்டு பூனை வானத்தையே அசையாமல்

பார்த்துக்கொண்டு இருந்தால்

ஏதோ ஒரு ஆவியை காண்கிறது என்று அர்த்தம்.

.

4] ஆவிகள் கூடுமானவரை ஆபத்தானவை அல்ல..

தங்களை வெளிக்காட்டிக்க

ொள்ளவே முயற்சி செய்யும்.

.

5] விபத்து அல்லது கொலைகளினால்

உண்டான பேய்கள் அல்லது ஆவிகளின்

தோற்றம் மட்டும் தான் பயங்கரமானதாக

இருக்கும்.I

.

6]பூமியை விட்டு உறவுகளை விட்டு செல்ல

விரும்பாதவ்ரகள் தான்

கூடுமானவரை பேய்கள் அல்லது ஆவிகளாக

சுற்றுவார்கள்.

.

7] பேய்கள் அல்லது ஆவிகளுக்கு உங்கள்

எதிர்காலம் நன்றாகவே தெரியும்.. சில

நேரங்களில் அவை கனவுகளின் மூலம்

வெளிப்ப்படுத்த முயற்சி செய்யும்.

.

8] நல்ல பேய்கள் அல்லது ஆவிகள்

பயங்கரமான தோற்றம் அற்றவை. கெட்ட

பேய்கள் அல்லது ஆவிகள் தோற்றம் மிக

கொடூரமானதாக இருக்கும்.

.

9] பேய்கள் அல்லது ஆவிகள்

தனக்கு நெருக்கமானவர்கள

ுக்கு அல்லது தன்

சாவுக்கு காரணமானவர்களுக்

கு மட்டுமே தன்னை வெளிக்காட்டிக்கொள்ள

முயற்சிக்கும்.

.

10] பேய்கள் அல்லது ஆவிகளால் [கெட்ட]

கொலைசெய்ய முடியாது.. ஆனால் ஒருவன்

தன்னை தானே கொலைசெய்யும்

அளவுக்கு தூண்டிவிடும் சக்தி உண்டு.

.

11] பேய்கள் அல்லது ஆவிகளால்

ஒரு மனித உடலில்

புகுந்து மற்றொருவருடன் தகவல்

தொடர்பு கொள்ள முடியும்.

.

12] பேய்கள் அல்லது ஆவிகளால் 12 நாட்கள்

மட்டுமே [இறந்த நாள்முதல்] அவர்கள்

வீட்டில் அருகில் இருக்க முடியும்.

.

13] பேய்கள் அல்லது ஆவிகள்

இறந்துபோனவரின் உடலை அடக்கம் செய்யும்

வரை அவர்களை பற்றி யார்

பேசிக்கொண்டு இருந்தாலும் அருகில்

நின்று கேட்கும் குணம் உண்டு.

திடீர் விபத்து,தற்கொலை,போர்/கலகம்/கொலை/எதிர்பாராத மரணம் இவற்றால் இறப்பவர்கள் முறைப்படி இறக்கும் காலம் வரை ,எங்கேஇறந்தார்களோ,அங்கேயே ஆவியாக இருக்க வேண்டும்.இறந்தது ஆண் எனில் அதற்கு பேய் என்றும், பெண் எனில் பிசாசு என்றும் பெயர்.நம் சூட்சுமஉடல் ஸ்தூல உடலான ஐம்பூத உடலில் இருந்து பலவந்தமாக பிரிக்கப்படுவதால் இறந்தவரின் ஆவி எந்த இடத்தில் மரணமடைந்ததோ அங்கேயேசுற்றும்.சுமார்20 அடி சுற்றளவுக்குள் சுற்றும்.வெளியேஎங்கும் செல்லமுடியாது.உயரேயும் பறக்க முடியாது

அகத்தியர் அருளிய பேய் விரட்டும் தந்திரம்?

கோழியில் இருந்து முட்டை வந்ததா?, அல்லது முட்டையில் இருந்து கோழி வந்ததா? என்பது மாதிரி பேய், பிசாசு, பூதம், பிரம்மராட்சதர்கள் என்கிறஒன்றின் இருப்பு அல்லது இல்லாமை குறித்த விவாதங்கள் முடிவில்லாத ஒன்று. என் வரையில் இது முழுக்க முழுக்க உளவியல் மற்றும்தன்னம்பிக்கை சார்ந்த ஒரு விஷயமாகவே கருதுகிறேன். மேலும் பிறருக்கு துன்பம் விளைவிக்க கூடிய எந்த ஒரு மனோபாவமும் பேய்தான்.

இந்த பேய்களைப் பற்றி சித்தர் பெருமக்கள் தங்களின் பாடல்களில் பல இடங்களில் குறிப்பிட்டிருக்கின்றனர். அகத்தியரும் கூட தனது பாடலில்பேய்களின் குணாம்சம் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

“கட்டடா பேயினது முறையைக்கேளு

காணுகிற குணங்காணும் கருத்தில் சொல்வேன்

இஷ்டமுடன் பெண்களையாண் ரூபமாக்கும்

மினிதான ஆணானால் மோகினியைக் காட்டும்

நட்டிரவில் சாய்பிதற்றும் கருவழிக்கும்

நளிர்சுரங்கள் பெரும்பாடு நடுக்கும்பித்தம்

முட்டெனவே பெண்புருஷன் கூடிவாழ்வாள்.

முறையையுட னதுபோகு முறையைக்கேளே.”

– அகத்தியர் –

பேய் பிடித்த பெண்கள் தங்களின் இயல்புகளை இழந்து ஆண்களைப் போல முரட்டுத் தனமான இயல்புகளை வெளிக் காட்டுவர். இதைப் போல ஆண்களைபிடித்த பேய்கள் மோகக் கன்னியாய் வந்து அவர்களின் இந்திரியத்தை நஷ்டமாக்கும் என்கிறார். மேலும் கருவுற்ற பெண்ணின் கருவை அழிப்பதுடன்,காய்ச்சலும், உடல் நடுக்கமும், பித்த உபரியும் தருமாம். ஆண்,பெண் கூடிவாழ விடாமல் செய்யுமாம். இப்படி கொடுமையான குணாம்சங்களைக்கொண்ட பேய், பிசாசு மற்றும் பிரம்ம ராட்சதர்களை விரட்டும் முறையையும் பின் வருமாறு சொல்லியிருக்கிறார்.

“கேளடா பிசாசினது பலத்தைப் பார்த்துக்

கிளர்பஞ்சா க்ஷரத்தினது கிருபைநோக்கி

ஆளடா கோழிபன்றி யாடுகாவு

ஆஇஅரிஓம் உருவைந் நூறுபோடு

தாளடா காரீயம் செம்புதங்கம்

தகடெழுதி யிடைக்கழுத்தில் சிரசில்கட்ட

பாழடா அலகையென்ற பேய்களெல்லாம்

பறக்குமடா பிரமராட்ச சும்பாரே.”

 ஸ்திரீ புருஷர்கள் எவருக்காவது பேய் பிடித்திருந்தால் அவர்களை ஸ்நானம் செய்யாமல் அவர்கள் எப்படி வருகிறார்களோ அப்படியே அழைத்து வந்துகுத்தவைத்து மேற்படி தூளை கலக்கப்பட்ட விபூதியை கையில் எடுத்துக் கொண்டு தங்களின் இஷ்ட தெய்வத்தை வேண்டி எதிரில் இருப்பவரின் மீதுவிபூதியை போட உடனே பயந்து தலைசற்றி ஆடுவது மட்டுமில்லாமல் வாயில் வந்தபடியெல்லாம் பினாத்திக் கொண்டு ஆடி, ஆடி ஊரும் பேரும்சொல்லி அபயம், அபயம் நான் போகிறேன் நான் போகிறேன் என்று சொல்லும் அது சமயம் முடியறுத்து விட்டு ஜலம் மேலே தெளித்து ஸ்நானம்செய்விக்க உடனே மயக்கம் தெளிந்து விடும்

No Comments

Post A Comment