Golden Rule

Golden Rule

கீழே கொடுக்கப்பட்டுள்ள Golden Rule அனைத்தும் பிரபல பிரசன்ன ஆராய்ச்சியாளரிடம் இருந்து பெறப்பட்டு சோதனை செய்யப்பட்டதில் 95% உண்மையாகிறது
1. 1ல் சுக்கரன் –காமம் அதிகம் உண்டு.
2. 2ல் சுக்கரன் கள்ளத் தொடர்பு கட்டாயம் இருக்கும்.
3. 4ல் சந்திரன் நல்ல வீடு உண்டு, தாயாரால் பிரச்சினை.
4. 5ல் சனி(வக்கரம்) வேலைக்காரகளால் தொந்தரவு, மாமன் இல்லை. பிரகார தெய்வ வழிபாடு.
5. 6ல் செவ்வாய் கணவனை மதியாள். எதிரிகள் அதிகம்.
6. 4க்கு கேந்திரத்தில் சூரியன் தாகப்பன் சொத்து இல்லை.
7. 10ல் சுக்கிரன் பணக்கார வாழ்வு பின்னாளில் உண்டு.
8. செவ்வாய், சந்திரன் நல்ல நிலையில் விவசாய நிலம் உண்டு.
9. புதன்  உச்சம் காலி மனைகள் காலி இடங்கள் உண்டு. கணவன் மனைவினிடையே அன்யோன்யம், மிக்க கேளிக்கையுடன் சந்தோஷம்.
10. சுக்ரன் சனி நல்ல பொருளாதாரம் உண்டு.
11. சந்திரன் சனி ராகு வெளிநாடு செல்லுதல், பயன கிரகங்கள்.
12. 7ல் குரு சாதுக்களின் சாபம்.
13. 10க்குடையவன் 3ல் சொந்த இடத்தில் தொழில் அமையாது.
14. குரு சந்திரன் ராகு உணவு விஷம்.
15. 10ல் நீச கிரகம் சொந்தப் பொருளை அனுபவிக்க இயலா நிலை.
16. செவ்வாய் சந்திரன் கேது திருமண வெறுப்பு.
17. சந்திரன் சுக்ரன் ராகு சனி அருவறுப்பு நோய்.
18. குரு புதன் சந்திரன் கேது பிரம்மச்சாரு, தாமதத்திருமணம்.
19. குரு கேது தாமதத் திருமணம்.
20. குரு சந்திரன் புதன் சூரியன் காதல் திருமணம்.
21. 2க்குரியவன் 9,11ல் இரண்டு திருமணம்.
22. செவ்வாய் சுக்கிரன்  சந்திரன் படி தாண்டும் திருட்டு உறவு.
23. 6க்குடையவன் திசையில் நொடிந்து போவார்கள், ஐபி கொடுத்தல்.
24. செவ்வாய் புதன் சந்திரன் கோழை.
25. 8ம் அதிபதி 8 ல் எங்குசென்றாலும் சொந்த ஊர் திரும்புதல்.
26. 6,8க்குடையவர்கள்12ல் மறைதல் அக்கா தங்கை உறவு பார்க்காது.
27. அஷ்டமச் சனி( உதயத்திற்க்கு 8ல் சனி) தன் பேராசைக்காக தன்னை வளர்த்தவருடன் போராடுதல், பேராசை அதிகமாகும் காலம்.
28. 2ல் செவ்வாய் கோபம் குடி கெடுக்கும் நிலை.
29: .சந்திராஷ்டம்ம்(தொந்தரவு).
30. 3ல் குரு தம்பியை ஏமாற்றும் நாடகதாரி, காதில் காற்றுடைப்பு.
31. 11ல் சூரியன் பழம் நழுவிபாலில் விழுதல்.
32. செவ்வாய் எங்கிருப்பினும் அதனின்று 10ம் வீடு கெடும்.
33. 3ல் சனி(அ) வக்கிரம்  தன் படிப்பை பாதியில் நிறுத்துதல் .
34. சூரியன் சந்திரன் குடும்ப நபர்களில் யாரேனும் ஒருவர் திருமணப் பிரிவுடன் இருப்பிர்.
35. குரு சந்திரன் நல்ல செல்ல வளம் பெயர் தந்தாலும் தனிப்பட்ட வாழ்வில் மனக்கசப்பே, உடன் பிறந்த சகோதரர் வாழ்க்கையைக் கெடுக்கும்.
36. குரு சந்திரன் நல்ல செல்ல வளம் பெயர் தந்தாலும் தனிப்பட்ட வாழ்வில் மனக்கசப்பே உடன் பிறந்த சகோதரர் வாழ்க்கையைக் கெடுக்கும் புத்திர தோஷத்தைக் காட்டும்.
37. 10 ல் செவ்வாய் சொந்தத் தொழில செய்வதைக்காட்டும்.
38. 5ல் செவ்வாய் தகப்பன் காலத்திற்குப் பின் யோகம் தருகிறது.
39. 6ஆம் இடத்தில்  ராகு வாழாத பெண்கள் உள்ள நிலை.
40. 6ஆம் அதிபதி நீச்சம் திருடிய பொருள் தங்காது.
41. 7ஆம் அதிபதி நீச்சம் மனைவி தங்காது, மனைவியின் பொருள் தங்காது (அ) எதிராளி (அ) பார்ட்னர் இருக்கமாட்டார்.
42. 8ம் அதிபதி நீச்சம் ஆயுள் தொந்தரவு.
43. குருவிற்கு 5,7,9 ல் கிரகம் இல்லை அற்ப ஆயுள், நோயாளி.
44. 7மிடம் திருடனின் நிலையை குறிக்கும்.
45. 7ம் அதிபதி திருடனைக் குறிக்கும்.
46. செவ்வாய் சனி ராகு பெரிய விபத்தைக் தரும் நிலையை காட்டுகிறது.
47. சுக்ரன் அஸ்தமனம் திருமணத் தாமதம். மனைவி தங்காமை, கண்கோளாறு, உடம்பின் முக்கிய சுரப்பகள் இயங்காத நிலை.
48. 1,7 க்குடையவர்கள் 6,8,12 இருப்பின் விரைவில் பிரிவு.
49. சனி சந்திரன் ஆஸ்துமா, புணர்பு யோகம் (திருமணத்தைத் தாமதப்படுத்த பொருளாதாரம் பாதித்தால் திருமணம் எளிதில், விரைவில் முடிந்து விடுகிறது) பந்தல் வரை போய் திருமணம் நின்றுபோனது புணர்பு யோகத்தினால்.
50. புதன் சந்திரன் சனி இழுவைச் சனி.
51. சந்திரன் புதன் டென்சன் பேர்வழி, மன அழுத்தம்.
52. 8ல் குரு வரட்டுப் பிடிவாதம்.
53. 4,8 க்குடையவர் சேர்க்கை வண்டி வாகன மிருகாதி விபத்துக்கள்.
54. 3ல் செவ்வாய் குருட்டுத் தைரியம்.
55. 5ல் சனி உதயத்தில் சனி நீசமான தெய்வம் (கருப்பராயன், முனியம்மாள், பாவாடைத் தாய், பிரகார தெய்வங்களை குறிக்கும்).
56. லக்னம், சனி 3 பாகைக்குள் அற்பாயுள்.
57. மாந்தி சனி 3 பாகைக்குள் அற்பாயுள்.
58. குரு சனி இளமையில் தொழில், நரம்பு சம்பந்தமான நோய்கள்.
59. 5ல் கேது பூர்விகம் போராடி கிடைக்கும்.
60. 8ல் செவ்வாய் சனி மாங்கல்ய தோஷம் 100 சதவீதம்
61. 10ல் சந்திரன் நீச்சம் கடன் அடையாது.
62. 7க்குடையவர் 10ல் நீச்சம் கடன் அடையாது.
63. 4ல் சனி, 4ம் அதிபதி நீசம், 4ல் நீசம் நம்பி மோசம் போதல், நம்பிக்கை இழத்தல்.
64. 8ம் ஆதிபதி  7ல் முதுகு வலி.
65. குரு புதன் அதிக நண்பர்கள்.
66. 11ல் புதன், 5ல் புதன் ஜோதிடர்.
67. 9ல் பாம்பு 10ல் பாம்பு மாந்தீரீகர்.
68. சந்திரன் சுக்கிரன் பரிவர்த்தனை பல மனைவிகள், பணத்தட்டுப்பாடு.
69. சந்திரன் புதன் சுக்ரன் கட்டுப்பாடற்ற மனம்.
70. செவ்வாய் புதன் குடிகாரன்.
71. நீச்ச சந்திரன் செவ்வாய் தவறான பழக்கம்.
72. 3ல் சுக்ரன் சந்தேகப் புத்தி, மறைமுக உறவு.
73. சந்திரன் கேது மன நிலைதடுமாற்றம்.
74. சந்திரன் புதன் சுக்கிரன் அருவருக்கத்தக்க நோய்.
75. உதய லக்கன ராகு பெருத்த உடல், மச்சம் முகத்தில் உண்டு.
76. 10ல் வக்ர கிரகம், 10ம் அதிபதி வக்ரம் தொழிலில் தனித்து இயங்கா நிலையை தருகிறது.
77. சனி நீச்சம் தொழிலில் தனித்து இயங்கா நிலை.
No Comments

Post A Comment